ETV Bharat / bharat

நாட்டுக்காக பணியாற்ற விருப்பம்! கார்பரேட் பணியை உதறிய பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை! - UPSC Civil Service exam result - UPSC CIVIL SERVICE EXAM RESULT

கார்பரேட் வேலை உதறித்தள்ளி, தனது கனவை நோக்கி பயணித்த 24 வயது இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் டாப் 20 இடத்திற்குள் நுழைந்து காண்போரை வியக்கச் செய்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 1:21 PM IST

நொய்டா : டெல்லி அடுத்த நொய்டா செக்டர் 82 பகுதியைச் சேர்ந்தவர் வர்தா கான். 24 வயதான இவர் பிரபல கார்பரேட் நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் கை நிறைய சம்பாத்தியத்தில் இருந்து உள்ளார். இருப்பினும் இந்தியாவின் பிரதிநியாக உலக நாடுகளின் முன்னிலை அலங்கரிக்க வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு நீண்ட நாட்களாக இருந்து உள்ளது.

இதையடுத்து கார்பரேட் பணியை உதறித் தள்ளிய வர்தா கான். முழு நேரம் யுபிஎஸ்சி தேர்வாளராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். அதன் பிரதிபலிப்பாக நேற்று (ஏப்.16) வெளியான மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் டாப் 20 இடங்களுக்குள் வந்து அனைவரையும் பிரம்மிக்க வைத்து உள்ளார்.

தேசிய அளவிலான ரேங்கிக் பட்டியலில் வர்தா கான் 18வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளார். இந்திய வெளியுறவு பணியை தேர்வு செய்வதும், உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக தோன்றி சொந்த நாட்டுக்கு பல்வேறு புகழை பெற்றுத் தருவதையே தனது எண்ணம் என்றும் வர்தா கான் கூறுகிறார்.

இது குறித்து பேசிய அவர், "மற்ற அனைத்து தேர்வர்கள் போலவே, எனது பயணத்தைத் தொடங்கும்போது எப்படியாவது யுபிஎஸ்சி ரேங்கிங்கில் இடம் பெற வேண்டும் என கனவு கண்டேன். ஆனால் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தது கற்பனை செய்ய முடியாதது, முதல் 20 இடங்களுக்குள் வர முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது இப்போதும் கனவு போன்று உணர்வை தருகிறது. எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளனர்.

நான் எனது முதல் விருப்பமாக இந்திய வெளியுறவு சேவையைத் தேர்ந்தெடுத்துள்ளேன், உலக நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களில் இந்தியாவின் பிம்பத்தை மேலும் மேம்படுத்தவும், வெளிநாடுகளில் உள்ள நமது இந்திய புலம்பெயர்ந்தோருக்கு உதவவும் விரும்புகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

நொய்டா செக்டர் 82 பகுதியில் உள்ள விவேக் விஹர் இடத்தில் வர்தா கான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கலசா கல்லூரியில் வர்த்தத் துறையில் இளங்கலை பட்டம் முடித்த வர்தா கான் கார்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி உள்ளார். தந்தை 9 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தாயுடன் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க : யுபிஎஸ்சி தேர்வை முதல் முயற்சியிலேயே வென்ற இளைஞர் மர்ம மரணம்! ஆற்றில் சடலமாக மீட்பு! கொலையா? - UPSC Cleared Youngster Dead In UP

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.