ETV Bharat / bharat

தேச நலனே முதன்மையானது.. தமிழக மக்களுக்கு நன்றி.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? - NDA Government Formation Update - NDA GOVERNMENT FORMATION UPDATE

தேச நலனே முதன்மையானது எனவும் அதில் ஒருபோதும் சமரசம் செய்யப்போவதில்லை எனவும் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 2:02 PM IST

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி(NDA alliance) கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றக் குழுத் தலைவராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேசிய ஜனநயாக கூட்டணி(NDA) வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகள், வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்" என உணர்ச்சி பொங்க கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தேசத்தின் நலனே முதன்மையானது என்றும் அதில் ஒருபோதும் சமரசம் இல்லை எனவும் தெரிவித்தார். பாஜக அரசு மீது பழங்குடி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தான் அவர்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 8 மாநிலங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்றார்.

இதையும் படிங்க: "இந்த காலத்திற்கு ஏற்ற சரியான தலைவர்" மோடியை புகழ்ந்த சந்திரபாபு நாயுடு.. டெல்லியில் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள்!

மேலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும் அங்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது நமது வளர்ச்சியை காட்டுவதாக கூறிய மோடி, பாஜக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகள் கழித்து கூட காங்கிரஸ் கட்சியால் தனித்து 100 இடங்களில் வெல்ல முடியாத நிலையில் தான் அந்த கட்சி உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னதாக, நாடாளுமன்ற பழைய கட்டடத்தின் மைய அரங்கில், நடந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வருகைத் தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியல் சாசன புத்தகத்தை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்ட பிரதமர் மோடி அதனை வணங்கி மரியாதை செலுத்தினார்.

ஜூன் 9(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவிருப்பதாக பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், இன்றைய தினமே கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமைகோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.