விஜயவாடா: மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று (ஜூன்.11) தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யான் ஆளுநர் மாளிகை விரைந்தனர்.
தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து நாளை (ஜூன்.11) சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசம் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஞானவரம் ஏர்போர்ட் அடுத்த கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்ததும், ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியே தொடரும் என்றும் விசாகப்பட்ணம் மற்றும் கர்னூலின் வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மூன்று இடங்களும், பாஜகவுக்கு இரண்டு இடங்களும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை! டூவீலரில் விரட்டிச் சென்று இளைஞர்கள் கொடூரம்! - TV anchor Molested