ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? - Rameshwaram Cafe Blast 2 arrest

Rameshwaram Cafe Blast: ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 12:11 PM IST

Updated : Apr 14, 2024, 12:32 PM IST

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடித்தது. அதில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பற்றிய விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் முஷாமி ஷரீப் என்பவர் டெல்லியில் கடந்த மார்ச் 26ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டுள்ளார் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு பேர் முசாவீர் சாஹிப் ஹுசைன் (வயது 30) மற்றும் அப்துல் மதீன் தாஹா (வயது 30) ஆகியோரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.

அவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த இரண்டு பேர் குறித்து கிடைத்த தகவலை அடுத்து கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முசாவிர் ஹூசைன் தான் ஹோட்டலில் குண்டு வைத்ததாகவும், அப்துல் மதீன் என்பவர் குண்டு வைப்பதற்கு மூளையாக செயல்பட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : தோசை, இட்லி இருக்கட்டும் தமிழைப் பிடிக்குமா? தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? - ராகுல் காந்தி சரமாரி கேள்வி - Lok Sabha Election 2024

Last Updated : Apr 14, 2024, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.