டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22ம் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை நேற்று முன்தினம் (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாடளுன்மன்றத்தில் அவர் பேசியதாவது, "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசினேன். மேலும் இது குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து மனு அளித்தேன்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கு அவர் பதில் அளித்து இருந்தார். அதில் விஞ்ஞான ரீதியான வழியை தருவோம் என தெரிவித்து இருந்தார். ஆனால் 15 மாதங்கள் கடந்தும், இன்னும் அந்த கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வருகின்ற 30ஆம் தேதி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். ஒரு டேல்கேட்டை அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரு நகரமே கடையடைப்பது, இதுவே முதல் முறையாகும். இது பாஜக அரசின் மக்கள் விரோதத்திற்கு எதிரான போராட்டம். 2 கி.மீ தொலைவிற்கு 350 வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம் அல்ல.
எங்களுடைய கோரிக்கை என்பது கப்பலூர் டோல்கேட்டை வழியாகச் செல்லும் திருமங்கலம் நகர் மற்றும் கடலூர் சிப்கார்ட் பகுதியில் உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும் என்பதுதான்.
இதனை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பாஜக அரசு தமிழகத்திற்கு நியாயம் வழங்கவேண்டும் , ஏன் இந்த அரசு எங்களுக்கான உரிமைகளை வழங்கத் தயங்குகிறது என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த ஜூலை 1ஆம் தேதி திருமங்கலம் பகுதி உள்ளூர் மக்களும் மற்ற வாகன ஓட்டிகள் போல் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதனால் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மதுரையில் தான் பிறந்தீர்கள் நினைவு இருக்கா?" நாடாளுமன்றத்தில் நிர்மலாவை விளாசிய ப.சிதம்பரம்!