ETV Bharat / bharat

டிவி விவாதத்தில் தகராறு... பாஜக தலைவர் மீது நாற்காலி தாக்குதல்! ஒருவர் கைது! - BJP leader attack in TV debate - BJP LEADER ATTACK IN TV DEBATE

மத்திய பிரதேசத்தில் தனியார் ஊடகம் நடத்திய தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜக தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:39 PM IST

திகம்கர்க் : மத்திய பிரதேசம் மாநிலம் நசர்பக் பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தனியார் ஊடகம் சார்பில் விவாத நிஜழ்ச்சி கடந்த சனிக்கிழமை (ஏப்.20) இரவு நடத்தப்பட்டு உள்ளது. பாஜக சர்பில் மாவட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரபுல் திவேதி பங்கேற்று உள்ளார். அதேபோல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.

விவாத நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த போது பாஜக சார்பில் பங்கேற்ற பிரபுல் திவேதியின் கருத்தை எதிர்த்து பார்வையாளர்கள் பிரிவில் இருந்த இருவர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் பிரிவில் இருந்த இருவரும் பிரபுல் திரிவேதியின் கருத்துக்கு எதிரான கோஷம் எழுப்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை உரக்க கத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து பிரபுல் திவேதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாற்காலி தாக்குதலில் இருந்து பிரபுல் திவேதியை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஹிமன்சு திவாரி, பாபர் ஆகிய இருவரை போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாபரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஹிமன்சு திவாரி வலைவீசி தேடி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரம் அடைந்து உள்ள நிலையில், தாக்குதல் நடத்திய இருவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் பார்வையாளர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் சாகு விளக்கம் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க : "கல்லூரி மாணவி கொலை லவ் ஜிகாத் சதி.. குற்றவாளிகளை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி" - கர்நாடக பாஜக தலைவர்! - Karnataka College Girl Murder

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.