ETV Bharat / bharat

அக்பர், சீதா விவகாரம்: பெயர்களை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு! என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 8:07 PM IST

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கங்களுக்கு பெயர்களை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lion
Lion

கொல்கத்தா: திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சபாரி பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் பெயர்களுக்கு எதிராக தற்போது விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு நீதிமன்றத்தை நாடியது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விஸ்வ இந்து பரிஷத், சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அந்த மனுவில், "மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு வைத்து பெயர், அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர், சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம்.

மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது" என்று தெரிவித்து உள்ளது.

இதனிடையே, இரண்டு சிங்கங்களுக்கும் தாங்கள் பெயரிடவில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக பெயரிடுவதற்கு காத்திருப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திரிபுராவில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் மாற்றப்பட்டதாகவும், சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு வந்தவுடன் பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப். 22) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்காகத்திற்கு உத்தரவிட்டனர், மேலும், விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்பட உள்ள பெயர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் சார்ந்ததாக மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை சார்ந்ததாகவும் இருக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு சுமூகம்? யாராருக்கு எத்தனை தொகுதிகள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.