ETV Bharat / bharat

மீண்டும் செயல்படத் தொடங்கிய காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்.. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி! - காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம்

Congress Party Bank Accounts defreeze: காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

income-tax-appellate-tribunal-de-freezes-accounts-of-congress-party
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 4:05 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சி வரி செலுத்த வேண்டும் எனக் கூறி, இன்று காலை (பிப்.16) அக்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் விவேக் தன்கா கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், கட்சி வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை (பிப்.16), இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் (Ajay Maken) தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜய் மக்கன், "இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் பிரதான கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கட்சி வழங்கிய காசோலைகள் மதிப்பிழந்ததாக வியாழக்கிழமை அன்று வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது” என தெரிவித்தார்.

மேலும், "எங்களிடம் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் இல்லை. நீதி யாத்திரை மட்டுமின்றி, எல்லாம் பாதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் நன்கொடையைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்போது பணம் வராமல் எப்படி செலவுகளை மேற்கொள்வது?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

2018 - 2019ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய 45 நாட்களுக்கு மேல் தாமதிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அஜய் மக்கன் தெரிவித்தார். இதனையடுத்து கட்சி, வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தை (ITAT) தொடர்பு கொண்டிருப்பதாகவும், அங்கு மேல்முறையீட்டு விசாரணை நடந்து வருவதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கன் தெரிவித்திருந்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் முடக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.