ETV Bharat / bharat

வெளியானது தேசிய தரவரிசை பட்டியல்; தொடர்ந்து 6 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம்! - NIRF Ranking 2024 - NIRF RANKING 2024

IID Madras: நடப்பாண்டில் தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடமும், சிறந்த மாநில பல்கலைக்கழக பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.

கல்வி அமைப்புகள் போஸ்டர்கள்
கல்வி அமைப்புகள் போஸ்டர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ANI

Published : Aug 12, 2024, 6:05 PM IST

Updated : Aug 12, 2024, 9:05 PM IST

சென்னை: நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி (Indian Institute of Technology (IIT) Madras) தொடர்ந்து 6ஆம் ஆண்டாக முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science (IISc), Bengaluru) 2வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை ஐஐடி (IIT MUMBAI) 3வது இடமும், டெல்லி ஐஐடி (IIT DELHI) 4வது இடமும், கான்பூர் ஐஐடி (IIT KANPUR) 5வது இடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (Jawaharlal Nehru University, Delhi) 10வது இடமும் பிடித்து சாதனை பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரிகள் பட்டியல் : 2024 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி (Loyola College, Chennai) 8வது இடமும், கோவை PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதல் 6 இடங்களில் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

சிறந்த மாநில பல்கலைக்கழகம்: சிறந்த மாநில பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University, Chennai) முதலிடம் பிடித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் (Bharatiyar University, Coimbatore) 8வது இடத்தையும், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Cochin University of Science and Technology) 10வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

பொறியியல் பிரிவு (Engineering) : சென்னை ஐஐடி 9 ஆண்டுகளாக முதலிடமும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3 வது இடத்தையும், கான்பூர் ஐஐடி 4 வது இடத்தையும், கராக்பூர் ஐஐடி 5வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஆராய்ச்சிப் பிரிவு ( Research) : ஐஐடி பெங்களூரு முதல் இடமும், சென்னை ஐஐடி 2வது இடமும், ஐஐடி டெல்லி 3வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மருத்துவம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute Of Medical Sciences, Delhi) முதல் இடத்தையும், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Post Graduate Institute Of Medical Education And Research) 2வது இடமும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர் (Christian Medical College, Vellore) 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் வேகமாக நிரம்பும் டாப் 10 கல்லூரிகள் - கல்வியாளர் அஸ்வின் கூறும் தகவல்! - engg 1st round counselling result

Last Updated : Aug 12, 2024, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.