ETV Bharat / bharat

ஜப்பான் சுற்றுலா பயணியிடம் ரூ.31 லட்சம் கொள்ளை! போலி காவலர்கள் மூலம் வடமாநில கும்பல் கைவரிசை! துணை போன போலீஸ் - சிக்கியது எப்படி? - Japan tourist defraud - JAPAN TOURIST DEFRAUD

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பான் நாட்டவரிடம் 31 லட்ச ரூபாய் ஏமாற்றிய வழக்கில் 3 கொள்கையர்கள் மற்றும் கொள்ளையர்களிடம் 7 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு வழக்கின் விசாரணையை கைவிட்ட தலைமைக் காவலர் இரண்டு காவலர்களை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 8:20 PM IST

Updated : Apr 9, 2024, 12:55 PM IST

ஜெய்ப்பூர் : கடந்த 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலா வந்த ஜப்பான் பயணியிடம் ஏறத்தாழ 31 லட்ச ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தலைமைக் காவல்ர் உள்பட இரண்டு காவலர்கள், 3 கொள்ளையர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஜப்பானை சேர்ந்த சசூன் தகேஷி கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சுற்றுலா வந்து உள்ளார். விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த சசூன் தகேஷிக்கு, உள்ளூரை சேர்ந்த ஷரீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஜப்பான் மொழியில் நல்ல புலமை பெற்று இருந்த ஷரீப் அதன் மூலம் தகேஷியுடன் நெருக்கமாகி உள்ளார். மேலும், ஷரீப்பின் ஜப்பான் புலமையில் மெய் மறந்து போன தகேஷி, அவருடன் சேர்ந்து பயணிக்கது தொடங்கி உள்ளார். ஷரீப் மூலமாக தகேஷிக்கு, கய்யூம் என்பவரது அறிமுகம் கிடைத்து உள்ளது.

கய்யூமும், ஷரீப்பும் இணைந்து ஜெய்ப்பூர் புறநகர் பகுதியான ஜோத்வாராவுக்கு தகேஷியை அழைத்துச் சென்று உள்ளனர். அங்கே கய்யூம், ஷரீப் மூலம் அஸ்கர் என்பவரின் அறிமுகம் தகேஷிக்கு கிடைத்து உள்ளது. தன்னை தொழிலதிபர் என அறிமுகம் செய்து கொண்ட அஸ்கர், தன்னுடன் இனைந்து தொழில் செய்தால் கோடிக்கணக்கில் பணம் பெறலாம் என தகேஷிக்கு ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

மறுநாள் கங்கையை காண தகேஷி விரும்பிய நிலையில், அவரை மூளைச் சலவை செய்த கய்யூம் மற்றும் ஷரீப், அஸ்கர் கிராமத்தில் பார்டி நடப்பதாக கூறி அழைத்துச் சென்று உள்ளனர். அங்கே இரண்டு நாட்கள் தகேஷி தங்க வைக்கப்பட்ட நிலையில், அதன்பின் மூவரும் சேர்ந்து தங்களது நாடகத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளனர்.

போலி காவலர்கள் இரண்டு பேர் தகேஷி தங்கி இருந்த இடத்தை சோதனையிடுவது போல் நாடகமிட்டு அங்கிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்வது போல் நாடகமாடி உள்ளனர். மேலும், கஞ்சா வழக்கில் தகேஷி உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைப்பதாக போலி காவலர்கள் மிரட்டி உள்ளனர்.

இதைக் கண்டு அஞ்சுவது போல் நடித்த மூன்று பேரும் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப லஞ்சம் தருவதாக போலி போலீசாரிடம் பேரம் பேசி உள்ளனர். அதன் பின் தகேஷியிடம் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று போலி காவலர்களிடம் மூவரும் வழங்கி உள்ளனர். இருப்பினும், மேற்கொண்டு பணம் கேட்ட போலி போலீசார், மறுநாள் தகேஷியை ஜெய்ப்பூர் அழைத்துச் சென்று அவரது கிரெடிட் கார்டு மூலம் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு கடைகளில் தங்கம் வாங்கி உள்ளனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் இருந்து தப்பித்ததாக கூறி தகேஷியை விமான நிலையத்தில் இறக்கி விட்டு மூவரும் தப்பி உள்ளனர். விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்த போதும் தகேஷியை மூவரும் எளிதில் விட்டுவிடவில்லை. போலீசார் மிரட்டுவதாக கூறி ஆன்லைன் மூலம் ஏறத்தாழ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை தகேஷியிடம் இருந்து மூவரும் பறித்து உள்ளனர்.

இந்நிலையில், மூவரும் ஏமாற்றியது தகேஷிக்கு தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர் தூதரகம் மூலம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். அந்த புகார் வித்யகபுரி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் சத்யேந்திர சிங், மற்றும் காவலர் ராஜ்குமாரிடம் விசாரணைக்கு வந்து உள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் அழைத்த காவலர்கள் அவர்களிடம் இருந்து 7 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை மூடி உள்ளனர். அதேநேரம் மூத்த அதிகாரிகள் வழக்கு குறித்து விசாரணையை தீவிரப்படுத்த காவலர்கள் இருவரும், மூன்று கொள்ளையர்களை அழைத்து வாங்கிய பணத்தை திருப்பி தருவதாகவும் விசாரணையின் போது தங்களை காட்டிக் கொடுக்கக் கூடாது என தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே மூன்று கொள்ளையர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கண்ட அனைத்து தகவல்களும் தெரியவந்ததாக போலீசார் கூறி உள்ளனர். இதையடுத்து அஸ்கர், கய்யூம், ஷரீப் மற்றும் இரண்டு காவலர்கள் ஆகியோரை கைது செய்து வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : பணத்துக்காக தோழியை கடத்திய நண்பர்கள்! மாட்டிக் கொள்வோமோ பயத்தில் கொலை செய்த கொடூரம்! - Maharashtra College Girl Kidnap

Last Updated : Apr 9, 2024, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.