வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் (32). அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ளார். செலினா கோம்ஸ் நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 425 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
இதன்மூலம் 400 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், அமரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் தற்போது செலினா கோம்ஸ் இணைந்துள்ளார். மேலும், இந்த வெற்றி இவரது முதன்மையான தொழிலாக பார்க்கப்படும் பாப் இசையின் மூலம் இல்லாமல் இவரது 'ரேர் பியூட்டி' என்ற ஒப்பனை மற்றும் அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தின் மூலமாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தை செலினா கோம்ஸ் தான் நிறுவி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 81.4 சதவீத வருமானத்தை செலினா கோம்ஸ் ஈட்டியுள்ளார். அதாவது, செலினா கோம்ஸின் தற்போதைய சொத்து மதிப்பான 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் 81.4 சதவீதம் ரேர் பியூட்டி மூலமாகவே கிடைத்துள்ளது.
பாரம்பரிய சொத்துக்களின் மூலம் இல்லாமல், தனது சொந்த முயற்சியினால் செலினா கோம்ஸ் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். மீதமுள்ள வருவாயை மியூசிக் ஆல்பம் விற்பனை, ரியல் எஸ்டேட் முதலீடுகள், ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள், பிராண்ட் பார்ட்னர்ஷிப்கள், பாப் இசை கச்சேரி மூலமாக செலினா கோம்ஸ் ஈட்டியுள்ளார்.
நீண்டகாலமாக பொழுதுபோக்கு துறையில் இருந்து வரும் செலினா கோம்ஸ்க்கு 2020இல் தொடங்கிய தனது ரேர் பியூட்டி நிறுவனத்தின் மூலம் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து அமெரிக்காவின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்து, பல பேருக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'சூர்யா 44' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு!