ETV Bharat / bharat

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங்: பாப் பாடகி ரிஹானா கான்சர்ட் முதல் சினிமா பிரபலங்களின் குத்தாட்டம் வரை! - ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங்

Anant Ambani - Radhika Merchant prewedding: ஆனந்த் அம்பானி - ராதிக மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் விருந்தில் பாப் பாடகி ரிஹானாவின் இசை நிகழ்ச்சி, கண்கவர் ட்ரோன் காட்சி உள்ளிட்டவைகள் காண்போரை மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தன.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 2, 2024, 3:54 PM IST

ஜாம்நகர் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பல்துறை கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சானுடன் கலந்து கொண்டார். மேலும் விருந்தில் கண்கவர் உடையில் தம்பதி கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.

ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல பாப் பாடகி ரிஹானாவின் கான்சர்ட் நிகழ்வு நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கான் உடன் கலந்து கொண்டார்.

அதேபோல், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் விழாவில் கலந்து கொண்டார். ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ஸ்ரேயா கோஷல், ஷியாமக் தவார் உள்ளிட்டோர் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏறத்தாழ மூன்று நாட்கள் மிகப் பிரம்மாண்டமாக ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முன்னதாக சாகச விலங்குகள் நிகழ்ச்சி, கண்கவர் ட்ரோன் கண்காட்சி உள்ளிட்ட மெய்சிலிர் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ம்அகள் இவாங்கா, தொழிலதிபர்கள் கவுதம் அதானி, நந்தன் நில்கேனி, அடார் பூனாவாலா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆன்மிக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அமீர் கான். கரன் ஜோஹர், ரன்பீர் கபூர் - ஆலியா பட், அனில் கபூர், மாதுரி திக்‌ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: 4 பேரிடம் போலீசார் விசாரணை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.