ETV Bharat / bharat

சிக்கன் டிப் செய்யும் யம்மி மயோனைஸ்.. ஹைதராபாத்தில் தடையா? - MAYONNAISE BAN

மயோனைஸில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதால், முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸிற்கு தடை விதிக்கக் கோரி பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்கு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.

மயோனைஸ் கோப்பு படம்
மயோனைஸ் கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 1:37 PM IST

ஹைதராபாத்: துரித உணவுகளில் முதன்மை வகிக்கும் மயோனைஸ் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். சாண்ட்விச், பர்கர், பீட்சா, ஷவர்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் தனிச்சுவை கொண்டதால் அதனை அனைவரும் விரும்புவர்.

மயோனைஸ் முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும். சமைக்கப்படாத பொருளாக இருப்பதால், மயோனைஸில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தெலங்கானா அரசு மயோனைஸை தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அல்வால் என்ற பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தரமற்ற மயோனைஸ் சாப்பிட்ட ஐந்து இளைஞர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி இதே போன்ற சம்பவம் நடந்தது. ஒரே ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனல்லா பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவைக் கலக்கும், தமிழ்நாட்டு அனுமன்! அரசின் ஆதரவு கிடைக்குமா?

அதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டல் ஷவர்மா தரமானதாக இல்லையென பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்கு (GHMC - Greater Hyderabad Municipal Corporation) புகார் அளிக்கப்பட்டது. மேலும், செகந்திராபாத் கிழக்கு மெட்ரோ நிலையம், டோலிச்சௌகி, சந்திராயணகுட்டா, கட்டேடன் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் ஷவர்மா, மண்டி பிரியாணி மற்றும் பர்கர்கள் குறித்து பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.

இதன் அடிப்படையில், பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள பிரபல ஹோட்டல்கள், பப்கள் மற்றும் பார்களில் நடத்தப்பட்ட சோதனையில் தரமற்ற மயோனைஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், மயோனைஸில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதால், இதன் மூலப்பொருட்களை தடை செய்யவும், சைவப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் அரசுக்கு ஒருவர் கடிதம் எழுதி உள்ளதாக, அரசுக்கு கடிதம் எழுதிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு முட்டையில் இருந்து மயோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு கேரளா மாநில அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது. முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸிற்கு தடை விதித்த முதல் இந்திய மாநிலம் கேரளா தான்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.