ஹைதராபாத்: அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்துக் கடவுளான ராமரின் ஓவியத்தை அவர் கையில் வைத்திருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் தவறான கூற்றுடன் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
பூம் எனும் உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் மூலம் சரி பார்த்ததில், அசல் படத்தில் ஓவைசி தன் கையில் அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2024 மே 13 அன்று நடைபெற்ற நான்காவது கட்ட மக்களவைத் தேர்தலில், ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசி போட்டியிட்டார். வெளியிடப்பட்ட அந்த புகைப்படத்துடன் இந்தியில் ஒரு வாக்கியமும் பகிரப்பட்டுள்ளது. அதில் “உண்மை வெளிப்படும்போது, நல்லவர்கள் கூட வரிசையில் வருவார்கள்” என கூறப்பட்டிருந்தது.
(இந்தியில் உள்ள வாக்கியம்: जब लगता है कि फट जाएगी तो अच्छे अच्छे लाईन पर आ जाते हैं !!)
உண்மை: பூம் இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடுதல் நடத்தி பார்த்தபோது, அசாதுதீன் ஒவைசி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 7, 2018 அன்று பதிவிட்டிருந்த அசல் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையான புகைப்படத்தில், ஓவைசி அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்திருப்பதைக் காணலாம்.
ஓவைசி அந்த புகைப்படத்தை பதிவிட்டு அதில், “மோச்சி காலனியைச் சேர்ந்த தலித்துகள் AIMIM கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் AIMIM தலைவர் பாரிஸ்டர் அசாதுதீன் ஓவைசியைச் சந்தித்து, தங்கள் பகுதியில் (ராம்நாஸ்புரா திவ் பகதூர்புரா தொகுதி) வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.
2018 இல் ஒவைசி வெளியிட்ட உணமையான புகைப்படத்தையும் வைரல் புகைப்படத்தையும் ஒப்பிட்டுள்ளோம்.
உரிமை கோரல்: AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்துக் கடவுளான ராமரின் உருவப்படத்தை வைத்திருப்பதை புகைப்படம் காட்டுகிறது.
உரிமை கோரப்பட்டது: சமூக ஊடக பயனர்கள்
உண்மை சரிபார்ப்பு: பொய்
குறிப்பு: இந்த கதை முதலில் சக்தி கலெக்டிவ்வின் ஒரு பகுதியாக பூமில் வெளியிடப்பட்டு ஈடிவி பாரத் ஊடகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Fact Check; டெல்லி கொலைச் சம்பவம் குறித்த வைரல் வீடியோ.. மதவாதத்தை தூண்டுவதற்கான பதிவா? - Fact Check Of Delhi Murder Video