கொச்சி : காங்கிரஸ் தலைவர், முன்னாள் கேரளா முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் விரைவில் பாஜகவில் இணைய திட்டுமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஒரே மேடையில் பத்மஜா வேணுகோபால் தோன்ற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிட பதம்ஜா வேணுகோபாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைவர்களின் தொடர் புறக்கணிப்பு காரணமாக பத்மஜா வேணுகோபால் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கேரளாவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருத்த பத்மஜான் வேணுகோபால், காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அந்த இடத்தை ஒதுக்கியதால் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மக்களவை உறுப்பினர் வடகரா கே. முரளிதரனின் சகோதரியான பத்மஜா வேணுகோபால், இதற்கு முன்னதாக கேரளா சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
தற்போது கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு முகுந்தபுரத்தில் மக்களவைத் தேர்தலிலும், 2021இல் திருச்சூரில் இருந்து சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பத்மஜா வேணுகோபால் தோல்வியடைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைசர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி ஜார்ஜ், அவரது மகன் ஷான் ஜார்ஜ் ஆகியோர் அண்மையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது பத்மஜா வேணுகோபாலும் பாஜகவில் இணைய திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : முறைகேடு வழக்குகள்: நவாஸ் ஷெரீப் மகன்கள் சரணடைய நீதிமன்றம் உத்தரவு!