டெல்லி : 2024 மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல்கள் தேதி குறித்த அறிவிப்பை இன்று (மார்ச்.16) தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இன்று (மார்ச்.16) மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது 2024 மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள பதிவில், 2024 மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 4 மாநிலங்களை தவிர இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!