ETV Bharat / bharat

ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம்! டிஜிசிஏ-வின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? - ஏர் இந்தியா அபராதம்

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1.10 கோடி ரூபாய் அபராதமாக டிஜிசிஏ விதித்து உள்ளது.

DGCA Impose Fine to AIR INDIA
DGCA Impose Fine to AIR INDIA
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:00 PM IST

டெல்லி : நீண்ட தூர பயணங்களின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை அபராதமாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

விமானங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகப்பு நடவடிக்கைகள் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆண்டுதோறும் கண்காணிப்பு ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் 5 ஆயிரத்து 745 கண்காணிப்பு ஆய்வுகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், 4 ஆயிரத்து 39 திட்டமிட்ட கண்காணிப்புகள் என்றும், ஆயிரத்து 706 உடனடி சோதனை மற்றும் இரவு நேர கண்காணிப்புகள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் 2023ஆம் ஆண்டு மட்டும் அதிகளவிலான கண்காணிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக டிஜிசிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறிய விமான பயிற்சி நிறுவனங்களின் உரிமம் இடைக்கால ரத்து, விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிஜிசிஏ தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட தூர பயணங்களின் போது போதிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • DGCA has initiated enforcement action and imposed a penalty of Rs 1.10 crore on Air India over allegations of safety violations of flights operated by Air India on certain long-range terrain critical routes: DGCA pic.twitter.com/f9oOQfx8Fo

    — ANI (@ANI) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : மக்களவை தேர்தலில் தனித்து போட்டி - மே.வங்கம் முதலமைச்சர் மம்தா அதிரடி அறிவிப்பு! காங்கிரஸ் பதிலடி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.