ETV Bharat / bharat

இண்டிகோ- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மோதல்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! என்ன நடந்தது? - Indigo hits Air india flight - INDIGO HITS AIR INDIA FLIGHT

கொல்கத்தா விமான நிலையில் ஓடுபாதையில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானம் நேருக்கு நேர் மோதுவது போல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இண்டிகோ விமானம் மோதியதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 6:57 PM IST

மேற்கு வங்கம் : கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் flight 6E 6152 என்ற விமானம் தர்பங்கா நோக்கி புறப்பட தயாராக இருந்து உள்ளது. அதேபோல் மற்றொரு புறம் சென்னை நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 1886 விமானம் புறப்பட தயாராக இருந்து உள்ளது.

இரண்டு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது போல் வந்ததாக கூறப்படுகிறது. விமானியின் சாதுர்யத்தால் விமானம் திசை திருப்பப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இண்டிகோ விமானம் மோதியதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.

இதில் இண்டிகோ விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 135 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் காலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக தர்பங்கா நோக்கி புறப்பட இருந்த இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானிகள் விரிவான அறிக்கை அளிக்கக் கோரி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக இரு விமான நிறுவனங்களின் ஊழியர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்! - Sadhguru Discharge

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.