ETV Bharat / bharat

"மோடி எனும் சர்வாதிகாரியிடம் இந்தியாவை பாதுகாக்க 140 கோடி மக்கள் ஆதரவு தேவை"- அரவிந்த் கெஜ்ரிவால்! - Arvind Kejriwal Interview - ARVIND KEJRIWAL INTERVIEW

நாட்டை கைப்பற்ற சர்வாதிகாரி எண்ணிய போதெல்லாம் மக்கள் அவரை வேறோடு அகற்றியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Etv Bharat
Delhi Chief Minister Arvind Kejriwal (photo source: ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:14 PM IST

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்று மீண்டும் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுவதற்கான சர்வாதிகாரம் தழைத் தோங்கியுள்ளது என்றார்.

தான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக் கொண்டு வருவதாகவும் ஆனால் தனி ஆளாக எதுவும் செய்ய இயலாது என்றார். ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என 140 கோடி மக்களிடமும் தான் மண்டியிட்டு கேட்டுக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

உச்ச நீதிமன்றம் தனக்கு 21 நாட்கள் மட்டுமே வழங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக வழங்குவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் எதிர்காலம் ஆம் ஆத்மி கட்சி தான் எதிர்காலம் என்பதை பிரதமர் அறிந்து கொண்டதால் பயத்தில் பாஜக தம்மை நசுக்கப் பார்ப்பதாகவும் கூறினார்.

ஆம் ஆத்மி சிறிய கட்சி, இரண்டு மாநிலங்களில் மட்டும் முழுவீச்சில் உள்ளது, ஆனால் பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியின் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பியதகாவும், ஒரே நேரத்தில் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினால் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என பிரதமர் மோடி நம்புவதாகவும் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் இந்தியாவின் வருங்காலம் என எண்ணி பிரதமர் மோடி அஞ்சுவதால் கட்சியை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து நேரடியாக மக்களை சந்திக்க வந்தது நல்ல உணர்வை ஏற்படுத்துவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தற்போது தான் தானும் தனது மனைவி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுடன் அனுமன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும், பஜ்ரங் பலியின் ஆசிர்வாதம் தனக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் ஒரே நாடு ஒரே தலைவர் என்பது தான் பிரதமர் மோடியின் திட்டம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரை சிறைக்கு அனுப்பி நாட்டில் ஜனநாயக படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும், அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டது என்றார். பிரதமர் மோடி அமல்படுத்த இருப்பது மிகவும் ஆபத்தான திட்டங்கள் என்றும் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் சிறைவாசம் உறுதி என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஜூன் 4ஆம் தேதி மத்தியில் ஆம் ஆத்மி கூட்டணி இல்லாத கட்சி ஆட்சி அமைக்காது என்றும் விரைவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். அசாம், குஜராத், பஞ்சாப் என எங்கு சென்றாலும், அரவிந்த் கெஜ்ரிவால் என்பது மனிதன் அல்ல சிந்தனை என்றும் கெஜ்ரிவாலை கைது செய்யலாம் அவரது சிந்தனைகளை கைது செய்ய முடியாது என தெரிவித்து வருவதாக பக்வந்த் மன் கூறினார்.

மேலும் நடந்து முடிந்த 3 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் 400 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை பிரதமர் மோடி அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் வழக்குப்பதிவு! பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்! - Karnataka MP Prajwal Revanna Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.