மைஹர் (மத்தியப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நோக்கி, சனிக்கிழமை இரவு (செப்.28) பயணிகள் பேருந்து பயணித்து கொண்டிருந்தது. மத்தியப் பிரதேச மாநிலம், மைஹர் மாவட்ட எல்லைக்குட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாற ஓட தொடங்கியதாக தெரிகிறது. அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 17 முதல் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர் என்றும். அவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மைஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதிர் அகர்வால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விபத்தில் ஒன்பது பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த கோர விபத்தில் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி-நியூயார்க் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிக்கு தரப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி
சிகிச்சை பெற்றுவருபவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். இப்பயணிகளில் பெரும்பாலோர் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று முதல்வர் மோகன் குமார் யாதவ் பதிவிட்டுள்ளார்.