ETV Bharat / bharat

ஹோலி பண்டிகையின் போது எதிர் வீட்டு பெண்கள் எடுத்த வீடியோவால் +2 மாணவி தற்கொலை.. ஜான்சியில் நடந்தது என்ன? - Uttar Pradesh Student Suicide - UTTAR PRADESH STUDENT SUICIDE

Uttar Pradesh 12th Class Student Suicide Case: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து உயிரிழந்த விவகாரத்தில், நான்கு பெண்கள் மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

Uttar Pradesh 12th Class Student Suicide
உத்தர பிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 1:09 PM IST

ஜான்சி: உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு அவர் குறித்த தவறுதலான புரிதல் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 25) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த நாளில், மாணவியின் வீட்டிற்கு உள்ளூர் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் வீட்டிற்கு வந்துவிட்டு சென்றதை, மாணவியின் எதிர் வீட்டில் இருந்த நான்கு பெண்கள் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து, மாணவிக்கு எதிராக பதிவிடப்பட்ட அவதூறு கருத்துக்களால், மன உளைச்சலின் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜான்சி மாவட்டத்தின் மௌரானிபூரில் உள்ள பதர்வாராவில் வசித்து வரும் மாணவியின் தந்தை அளித்துள்ள புகாரில், "18 வயதான எனது மகள், மௌரானிபூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். தற்போது தான் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். ஹோலி பண்டியன்று, அனைவரும் வீட்டில் ஒன்றாக தான் இருந்தோம். மதிய வேளையில் இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அவர் தண்ணீர் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியபோது, அதை எதிர்வீட்டில் இருந்த நான்கு பெண்கள் வீடியோ எடுத்தனர். அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து, அந்த வீடியோ வைரலானது. அதில் எனது மகளுக்கு எதிராக பல அவதூறு கருத்துக்கள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், அந்த வீடியோவையும், அதில் பதிவான அவதூறு கருத்துக்களையும் கண்டு அதிர்ச்சியடைந்த என் மகள், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். என் மகளின் மரணத்திற்கு, வீடியோ பதிவிட்ட அந்த 4 பெண்கள் தான் பொறுப்பு" என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து எஸ்.பி சோனி கூறுகையில், "மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாணவியின் உடன் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - Nia Raid

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.