ETV Bharat / bharat

"கல்லூரி மாணவி கொலை லவ் ஜிகாத் சதி.. குற்றவாளிகளை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி" - கர்நாடக பாஜக தலைவர்! - Karnataka College Girl Murder - KARNATAKA COLLEGE GIRL MURDER

கர்நாடக கல்லூரி மாணவி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் லவ் ஜிகாத் சதி போன்று உள்ளதாகவும் குற்றவாளிகளை பாதுகாக்க முதலமைச்சர் சித்தராமையா முயற்சிப்பதாகவும் கர்நாடக மாநில பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 1:18 PM IST

பெல்தங்கடி : கர்நாடக மாநிலம் ஹூப்ளி, தார்வத் நகராட்சி கவுன்சிலர் நிரஞ்சன் ஹயர்மத் என்பவரின் மகள் நேஹா ஹயர்மத் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மற்றும் மாணவ அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஹூப்ளியில் உள்ள பி.வி.பூமரடி கல்லூரியில் படித்து வரும் நேஹா ஹடர்மத்தை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நேஹா, பயாஸ் கோண்டுநாயக் என்ற இளைஞர் 7 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெலகவி மாவட்டம் சவுதாத்தி பகுதியைச் சேர்ந்த பயாஸ் கோண்டுநாயக்கை போலீசார் கைது செய்தனர்.

தற்போது பயாஸ் கோண்டுநாயக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, நேஹா - பயாஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இதனிடையே நேஹா வேறு இளைஞரை திருமணம் செய்ய திட்டமிட்டதால் பயாஸ் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதை மறுத்த நேஹாவின் தந்தையும் காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன் ஹயர்மத், தனது மகளை நீண்ட நாட்களாக பயாஸ் ஒரு தலைக் காதல் செய்து வந்ததாகவும் தனது மகளையும் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது மகள் இணங்கவில்லை என்றும் இது தொடர்பாக இளைஞரை அழைத்து பேசியதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் இந்து, நீங்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு அனுமதிக்க முடியாது என இளைஞரிடம் தெரிவித்ததாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் காதலிக்க தொடர்ந்து தனது மகள் மறுத்து வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் நிரஞ்சன் ஹயர்மத் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதாக கூறி பாஜகவினர் மற்றும் ஏபிவிபி உள்ளிட்ட மாணவ அமைப்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹூப்ளி - தார்வத் பகுதியில் உள்ள மாணவியின் கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா, இந்த விவகாரம் லவ் ஜிகாத் சதி போன்று காணப்படுவதாகவும், குற்றவாளிகளை பாதுகாக்க முதலமைச்சர் முயல்வதாகவும் கூறினார். மேலும், காங்கிரஸ் அரசு மகளிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதாக கூறுவதாகவும், ஆனால் கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாநில பாஜக தலைவர் கூறினார்.

கடந்த மூன்று நாட்களில், மாநிலத்தில் எட்டுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாநில உள்துறை அமைச்சரும் அதே வழியில் பேசுவதால் குற்றவாளிகளை காப்பாற்ற காங்கிரஸ் அரசு முயல்கிறது என்பதில் சந்தேகமில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கர்நாடகவில் கல்லூரி மாணவரி கொலை வழக்கு! அரசை கண்டித்து ஏபிவிபி அமைப்பினர் தொடர் போராட்டம்! - Karnataka College Girl Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.