டெல்லி : மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், நமது இளம் இந்தியா அதன் நோக்கங்களை எதிர்நோக்கி வேகமாக பயணித்து வருவதாகவும், நிகழ் காலத்தில் எண்ணி கர்வம் கொள்ளும் வகையிலும், சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கும் வகையிலும் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியில் மத்திய அரசின் சிறந்த கொள்கைகள் மற்றும் அற்புதமான பணிகளின் காரணமாக மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என எதிர்பார்ப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல பரிமாணங்களை சேர்ந்த 25 கோடி மக்களை வறுமை கோட்டில் இருந்து வெளியேற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார். இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுபேற்றதும் Sabka Saath, Sabka Vikas மற்றும் Sabka Vishwas திட்டங்களை எதிர்நோக்கி அதை வலுப்படும் முயற்சியில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து அதிக முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதி அமைச்சர் என்ற சிறப்பை நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (ஜன. 31) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரை நிகழ்த்தி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் கட்சி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால் இடைக்கால பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Budget 2024 Live Update: விமான நிலையங்கள் 149 ஆக அதிகரிப்பு