ETV Bharat / bharat

வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி! பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவை தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 6:44 PM IST

Updated : Mar 3, 2024, 12:53 PM IST

டெல்லி : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியிலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மேலும் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மக்களவை சபாநாயகருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட மறுவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், சிவராஜ் சிங் சவுகான் விதிஷா, ஸ்மிரிதி இராணி மீண்டும் அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். நிதின் கட்காரி நாக்பூரிலும், கிரண் ரிஜிஜூ அருணாசல பிரதேசத்திலும் போடியிடுகின்றனர். மொத்தம் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள், மற்றும் 28 பெண் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 47 பேர் 50 வயதிற்கும் குறைவானவர்கள், 27 பட்டியலினத்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஏறத்தாழ 195 பேர் கொண்ட பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடத்தில் வைத்து வெளியிட்டார்.

உத்தர பிரதேசத்தில் 51 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 20 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 24 இடங்களிலும், குஜராத் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9 தொகுதிகள், அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் தலா 11 தொகுதிகள், டெல்லியில் 5 இடங்கள், ஜம்மு காஷ்மீர், அருணாசல பிரதேசத்தில் தலா 2 தொகுதிகள், உத்தரகாண்டில் 3 இடங்கள், கோவா, திரிபுரா, அந்தமான் நிகோபார், டாமன் அண்ட் டை தலா 1 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: 4 பேரிடம் போலீசார் விசாரணை?

Last Updated : Mar 3, 2024, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.