பெங்களூரு: கர்நாடக மநிலம் பெங்களூரு கனகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபாய் (வயது 27). கடந்த ஜூன் 19ஆம் தேதி கணவருடன் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த சோப்பின் மீது கால் வைத்தார்.
சோப்பின் மீது கால் வைத்த வேகத்தில் வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழப் போனார். இதைக் கண்டு துரிதமாக செயல்பட்ட அவரது கணவர் ஓடிச் சென்று ரூபாயின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். இருப்பினும், சில விநாடிகளே அவரால் தனது மனைவியை தாங்கிக் கொள்ள முடிந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் ரூபாய், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தார். இதில் ரூபாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட கணவர், ஆட்டோ மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்து ரூபாய் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து ரூபாய் கீழே விழுவதையும் அவரது கணவர் தாங்கிப் பிடிப்பதையும் அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல்வேறு கோணங்களில் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் - புதிய சட்டம் அமல்! - Neet Exam Paper leak issue