புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்லுக்கு பிறகு, தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது.
அதாவது, எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் துவங்கி, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
#WATCH | Madhya Pradesh: People cast their votes at a polling booth in Pipariya Rajguru as polling begins for the Amarwara assembly bypoll, in Chhindwara. pic.twitter.com/R3fpGgRE4G
— ANI (@ANI) July 10, 2024
வாக்குப்பதிவு நடைபெறும் 13 தொகுதிகள்:
- விக்கிரவாண்டி (தமிழ்நாடு)
- ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா (மேற்கு வங்கம்)
- ரூபாலி (பீகார்)
- அமர்வாரா (மத்திய பிரதேசம்)
- பத்ரிநாத் மற்றும் மங்களூர் (உத்தரகாண்ட்)
- ஜலந்தர் மேற்கு (பஞ்சாப்)
- டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகார்க் (ஹிமாச்சல பிரதேசம்)
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!