ரஜோரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) மான்கோட் பகுதியில், ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், ஐந்து கமாண்டோக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜம்முவைச் சேர்ந்த ஒயிட் நைட் கார்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், லான்ஸ் நாயக் பல்ஜீத் சிங் என்ற வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ''கிளர்ச்சிக்கு எதிரான பணியின் போது ரஜோரி, மஞ்சகோட் அருகே நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில் தனது உயிரை இழந்த துணிச்சலான பல்ஜீத் சிங்கின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்திக்கிறோம்'' என பதிவிட்டுள்ளது.
#IndianArmy #GOC #WhiteKnightCorps and all ranks express deepest condolences to the family of L/Nk Baljeet Singh ,the braveheart who lost his life in a tragic road accident near #Manjakote, #Rajouri during counter Insurgency duty.
— White Knight Corps (@Whiteknight_IA) September 17, 2024
We pray for the speedy recovery of the injured.…
விபத்து குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், விபத்துக்குள்ளான ராணுவ வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. உள்ளூர் கிராமவாசிகள் மீட்புப் படையினருடன் இணைந்து, காயமடைந்த கமாண்டோக்களை வெளியேற்றியதாகவும், அவர்களின் நிலை மோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்