டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தனது 6வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் போட்டியிட உள்ள அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தானில் இந்து தேவி ஜதவ கருலி - தோல்பூர் தொகுதியிலும், கன்ஹய லால் மீனா தவுசா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல் மணிப்பூரில் தூணோஜம் பசந்த குமார் சிங்கிற்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்னர் மணிப்பூரில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை 405 வேட்பாளர்கள் அடங்கிய பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலம்! பலர் நிலை சந்தேகம்? அதிர்ச்சி வீடியோ! - US Bridge Collapse