டெல்லி : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக மத்திய தேர்தல் குழு முதல்முறையாக கூடுகிறது. தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 முதல் 120 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் கே.லக்சமன், வானதி சீனிவாசன், பி.எஸ் எடியூரப்பா, சர்பனந்த சோனோவால், இக்பால் சிங், லல்புரியா, சுதா யாதவ், பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் கட்சி இழந்த தொகுதிகள் குறித்தும், மக்களவை தேர்தலுக்கு சரியான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கபட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஜார்கண்டில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து - 2 பேர் சடலம் மீட்பு!