மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் யமுனா விரைவுச் சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இன்று காலை மதுரா பகுதியில் யமுனா விரைவுச் சாலையில் காரும் தனியார் பேருந்தும் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இரு வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து எரியத் தொடங்கியது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விபத்து குறித்து வெளியிட்ட தகவலின் படி, இன்று காலை 8 மணியளவில் மகவன் காவல் நிலைய பகுதி அருகில் பீகார் மாநிலத்தின் கயா பகுதியிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பின்புறத்தில் கார் மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த 55 பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த நபர்களில் ஒருவர் ஃபிரோசாபாத் பகுதியின் ஷிகோஹாபாத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மற்ற நபர்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நாட்டை கொள்ளையடிப்பது, பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள்" - பிரதமர் மோடி!