புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு, வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுத புதுச்சேரி பகுதியில் 31 தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 9 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதுச்சேரியில் 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளியைச் சேர்ந்த 11,994 பள்ளி மாணவர்களும், 387 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர்.
இதே போன்று, காரைக்கால் பகுதியில் பிளஸ் டூ தேர்வினை 11 அரசு மற்றும் 17 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,187 பள்ளி மாணவர்களும், 120 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் கால்குலேட்டர், மொபைல் போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, 10க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி மாணவர்கள் விதிமுறைகளை மீறினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: "புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்" - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி