தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

How To Get Rid Of Aging Skin Tips In Tamil: இளமையிலேயே முகத்தில் சுருக்கமா? அப்போ இதை உடனே ஃபாலோ பண்ணுங்க! - how to make serum

How To Get Rid Of Aging Skin Tips In Tamil: முதுமையை தவிர்க்க முடியா விட்டாலும் ஓரளவு இளமையான தோற்றத்தை நம்மால் தக்க வைக்க முடியும், அதற்கு வீட்டிலயே இயற்கையான முறையில் ஆர்கானிக் எண்ணெய் கொண்டு முக சீரம் தயாரிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

இளமையை தக்க வைக்க வேண்டுமா?.
இளமையை தக்க வைக்க வேண்டுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 7:16 PM IST

சென்னை:இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழல், ஆரோக்கியமற்ற உணவு முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இளம் வயதிலே சிலர் முதுமை அடைந்தது போலத் தோற்றம் அளிப்பதை நம் அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம் என 20 வயதிலேயே முதுமை அடைந்த நபர் போல மாற்றங்கள் ஏற்படுவது பலருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

வயசானலும் அழகு இன்னும் மாறவே இல்லையே என நாம் சிலரை பார்த்து நினைப்பது போல, முகத்தில் இருக்கும் பொலிவை தக்க வைக்கவும், முதுமையிலும் முகம் பளபளவென இருக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே இந்த முக சீரத்தை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

இயற்கையான முறையில் வீட்டிலயே கிடைக்கும் எளிதான பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், இயற்கையான பொலிவைத் திரும்பக் கொண்டுவர வீட்டிலயே தயார் செய்யக்கூடிய மூன்று முக சீரம்கள் உங்களுக்காக.

1) ரோஸ்ஷிப் மற்றும் ஜோஜோபா ஆயில் சீரம்:ரோஸ்ஷிப் எண்ணெய்யில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால் வயதான தோற்றத்திலிருந்து விடுபட முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது. இது ஜொஜோபா எண்ணெயுடன் இணையும் போது முகத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து இளமை சருமத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சமாக செயல் படுகிறது.

செய்யும் முறை:ஒரு கண்ணாடி பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி ரோஸ்ஷிப் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி ஜொஜோபா எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்

பலன்: முகத்தை சுத்தமாக கழுவிய பின் தயார் செய்யப்பட்ட எண்ணென்யை 2 சொட்டுகள் கையில் எடுத்து முகத்தில் நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதற்கு முன் இதை பயன்படுத்த வேண்டும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால் முகத்திற்கு பொலிவு தந்து, சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது

2) விட்டமின் C மற்றும் கற்றாழை சீரம்: விட்டமின் சி அதிகமான கொலாஜன் புரதத்தை கொண்டது. இதை பயன் படுத்துவதால் முகற்றில் உள்ள இறந்த செல்கள் அகற்றி, முகத்தை உடனடியாக பொலிவடைய செய்கிறது. கற்றாழையை பயன் படுத்துவதால் முகத்தின் வீக்கத்தைக் குறைத்தும், தோல் புத்துணர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

செய்யும் முறை:ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி விட்டமின் சி பவுடரையும், 2 கரண்டி கற்றாழை சாற்றையும் கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்தவுடன் இந்த சீரத்தை கண்ணாடி பாடிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை சிறிது எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும்.

பலன்:இதனை தினமும் பயன் படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைத்தும், சருமத்தை மிருதுவாக்கி பளபளப்பான முக தோற்றத்தை அளிக்கும்.

3)க்ரீன் டீ மற்றும் ஆர்கன் சீரம்: கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பிய ஆர்கான் எண்ணெயுடன் இதை இணைந்தால் புத்துணர்ச்சியூட்டும் சீரமாக மாறும்.

செய்யும் முறை: இந்த சீரம் செய்வதற்கு ஒரு கப் க்ரீன் டீயை எடுத்து நன்றாக ஆறவைத்து கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி க்ரீன் டீயை எடுத்து ஒரு கரண்டி ஆர்கன் ஆயிலுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பலன்: நன்றாக முகத்தை கழுவிய பின் சிறிது இந்த சீரத்தை எடுத்து முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து உபயோகிப்பதால் இளமைப் பொலிவை மீட்டெடுத்து முகத்தின் சருமத்தை இறுக்கமாக்கி 30 வயதிலும் 20 வயது போல தோற்றம் அடையச் செய்கிறது.

இதையும் படிங்க:எப்போதும் இளமை வேண்டுமா? அப்போ கண்டிப்பா இதை ஃபாலோ பண்ணுங்க!

ABOUT THE AUTHOR

...view details