தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை... பக்தர்களுக்கு அனுமதி இல்லை...

By

Published : Dec 9, 2021, 1:38 PM IST

Updated : Dec 9, 2021, 5:50 PM IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு வரும் கிற 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மட்டும் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 18 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சொர்க்க வாசல் திறக்கும்போது, பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பகல் பத்து 6ஆம் நாள் : நீள்முடிகிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்

Last Updated : Dec 9, 2021, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details