தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்! - தொடர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

In Trichy Farmers Continuous hunger strike
In Trichy Farmers Continuous hunger strike

By

Published : Jan 2, 2020, 12:33 PM IST

  • விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,
  • நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும்,
  • வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும்,
  • காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்,
  • கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • இடுக்கி மாவட்டத்தை கேரளாவிலிருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்து முல்லைப் பெரியாறு பிரச்னை, 58ஆம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.

திருச்சி ஜங்சன் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இந்தப் போராட்டம் இன்றுமுதல் வரும் எட்டாம் தேதிவரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க...சென்னையில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து செல்போன் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details