சேலத்தில் மட்டும் 17 தியேட்டர்களில் தர்பார் படம் இன்று காலை வெளியானது. அதிகாலை நடந்த சிறப்பு காட்சிக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரளாக வந்து, திரையரங்கு முன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து படத்தைப் பார்த்துச் சென்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தியேட்டர் ஒன்றில் திரண்ட ரசிகர்கள் ரஜினியின் போஸ்டருக்கு மலர்த் தூவி, கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினி போல வேடமிட்டு பாடலுக்கு நடனமாடினார்.