நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லாடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 136 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியரான நாராயண பிரசாத் (57) என்பவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார்கள் வந்துன. இந்நிலையில், மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியருக்கு தெரியாமல், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை ஆகிய பகுதிகளுக்கு ஒருநாள் கல்வி களப்பணி சுற்றுலா அழைத்துச் சென்ற நாராயண பிரசாத், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதை வெளியே சொன்னால் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தற்போது செய்முறை தேர்வுக்கான போடப்பட்ட நிலையில், சில மாணவிகள் நாராயண பிரசாத்தின் அத்துமீறல் குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.