தமிழ்நாடு

tamil nadu

நாகையில் திருத்தேர் வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

By

Published : Feb 5, 2020, 1:18 PM IST

நாகப்பட்டினம்: வாண்டுவார்குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலய  திருத்தேர் வெள்ளோட்டம்
உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் வாண்டுவார்குழலியில், உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலயம் அமைந்தள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற பெருமைக்குரியது இத்தளமாகும். இங்கு 63 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேர் பழுதடைந்து பிரம்மோற்சவம் மட்டும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையையடுத்து இந்து சமய அறநிலையத்துறை, பக்தர்கள் நிதியுதவியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதியதேர் வடிவமைக்கப்பட்டது. இந்த திருத்தேரின் வெள்ளோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்

முன்னதாக, கோயிலின் உள்ளே சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசத்தை தேரில் ஏற்றி பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து திருத்தேரை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என்ற நாமத்துடன் வடம் பிடித்து இழுந்துனர். இந்த திருத்தேர் நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை சென்றடைந்தது.

இதையும் படிங்க: ஆம்பூர் கங்கை திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் விழா!

ABOUT THE AUTHOR

...view details