தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பதிவு செய்து வருகிறார். அப்பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவற்றைச் சளைக்காமல் சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் ஆபாச வார்த்தைகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கஸ்தூரி பெயரும் இடம்பெற்று இருந்ததால் அதைக் கண்டு கடுப்பாகி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், 'மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. அஜித் ரசிகன்னு பீத்தி, அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. ' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட அஜித் ரசிகர்களோ, இது போன்ற ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் யாரும் ட்வீட் செய்யவில்லை. இது அஜித்தையும், அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்த யாரோ செய்த சதி என்று கூறியுள்ளனர்.