தமிழ்நாடு

tamil nadu

சமூக வலைத்தளம் மூலம் பிளாக்மெயில் செய்தவர் கைது!

By

Published : Mar 18, 2020, 11:21 PM IST

ஜார்க்கண்ட்: போலி சமூக ஊடகக் கணக்கு மூலம் சிறுமியை பிளாக்மெயில் செய்து அவரிடம் பணம் கோரியதாக 34 வயதான நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Jharkhand crime news
Jharkhand crime news

ஜார்க்கண்ட் மாநிலம், மெடினிநகரைச் சேர்ந்த 34 வயதான நபர் கடந்த புதன்கிழமை பலமாவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, போலி சமூக ஊடகக் கணக்கு மூலம் சிறுமி ஒருவரை காதல் வசப்படுத்தி, அவரிடம் ஆசைவார்த்தை பேசியுள்ளார். பின்பு சிறிது காலத்திற்குப் பிறகு பணம் கேட்டு அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் கண்ட பெற்றோர், என்ன நடந்தது என கேட்டுள்ளனர். பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதால் சிறுமி நடந்த அனைத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பிளாக்மெயில் செய்து வந்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் அருகே பூட்டிய வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details