நேரலை: உலக செஸ் சாம்பியன் குகேஷ் தமிழ்நாடு வருகை! - WORLD CHESS CHAMPION GUKESH
Published : Dec 16, 2024, 1:17 PM IST
|Updated : Dec 16, 2024, 1:28 PM IST
சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற "World Chess Championship" தொடரின் 14வது போட்டியில் சீனாவின் வீரர் டிங் லாரனை வென்று உலக சாம்பியன் என்ற பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து, பிரதமர் தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷ் சென்னை முகப்பேரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அதனை நேரலையில் காண்போம்.
Last Updated : Dec 16, 2024, 1:28 PM IST