LIVE: 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு! - Modi Oath Live - MODI OATH LIVE
Published : Jun 9, 2024, 6:38 PM IST
|Updated : Jun 9, 2024, 9:58 PM IST
டெல்லி: நடைபெற்ற முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 242 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். மேலும், இந்த நிகழ்விற்கு இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், வந்தே பாரத், மெட்ரோ ரயில் பணியாளர்கள், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என பலரும் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டு கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் ஐந்து கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Last Updated : Jun 9, 2024, 9:58 PM IST