தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மனசே மனசே மனசில் பாரம்.. கல்லூரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத மாணவர்கள்! - Dharmapuri College farewell video - DHARMAPURI COLLEGE FAREWELL VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:20 PM IST

தருமபுரி: கல்லூரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் ஐம்பெரும் விழா, செந்தில் நகர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டும் விழா, அன்னையர் தின விழா மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்த நிலையில், திரைப்படங்களில் கல்லூரி வாழ்க்கையில் வரும் பாடல்கள் ஒலிபரப்பு செய்துள்ளனர். குறிப்பாக, ஏப்ரல் மாதம் படத்தில் வரும் 'மனசே மனசே மனசில் பாரம்' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்ட நிலையில், அங்கிருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு தங்கள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details