ஏற்றி, இறக்கி சோதனை செய்யப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம்! - bamban Bridge
Published : Oct 1, 2024, 9:37 PM IST
|Updated : Oct 1, 2024, 10:25 PM IST
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சுமார் ரூ.550 கோடி செலவில் ராமேஸ்வரம் மண்டபம் கடல் பகுதி இணைக்கக்கூடிய ரயில்வே தூக்கு பாலம் பணிகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், புதிய ரயில்வே தூக்கு பாலத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹைட்ராலிக் செங்குத்தான தூக்கு பாலத்தை இன்று ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து செங்குத்தான ஹைட்ராலிக் பாலத்தை மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலையில் இந்த பணியில் ஈடுபட்ட போது வெறும் இரண்டு அடி மட்டுமே தூக்கி சோதனை செய்தனர். அதன்பிறகு இன்று மாலை முழுமையாக மேலே தூக்கி, இறக்கி வெற்றிகரமான சோதனை செய்தனர். இதில், ரயில் சோதனை செய்யப்பட்டு, முழுமையாக சான்றிதழ் கிடைத்த பின்னரே ரயில்வே சேவை தொடங்கும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்படுள்ள இரட்டை வழித்தட ரயில் பாலம் விரைவில் திறக்கப்பபட உள்ளது. இதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.