மகாத்மா காந்தியின் நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வெளிநாட்டுப் பெண்!
Published : Jan 30, 2024, 10:55 PM IST
புதுச்சேரி: புதுவையில் சுற்றுலா மேற்கொண்ட பார்சிலோனா நாட்டைச் சேர்ந்தவர்கள் கடற்கரையில் உலா வந்தனர். இந்நிலையில் இன்று(ஜன.30) காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது மகாத்மா காந்தியின் மீது பற்று கொண்ட பார்சிலோனா நாட்டைச் சேர்ந்த பெர்த்தா என்ற பெண், காந்தியடிகளின் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அருகில் இருந்த காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து, கையிட்டு கும்பிட்டும், புகைப்படங்கள் எடுத்தும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் இது குறித்து பெர்த்தா கூறுகையில், "மகாத்மா காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு அவர் மீது மிகுந்த பற்று உண்டு. இந்திய நாட்டின் விடுதலைக்காக அவரின் அகிம்சைவழிப் போராட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கு. உலகில் அவர் ஒரு சிறந்த தலைவர்.
சுற்றுலா வந்தபோது அவரின் நினைவு நாள் என கேள்விப்பட்டு மாலை அணிவித்தேன். எனது மகனும் பார்சிலோனாவில் பத்திரிகையாளராக உள்ளார்" என்று தெரிவித்தார். சுற்றுலா சென்ற இடத்தில் வெளிநாட்டுப்பெண் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலையிட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.