LIVE: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு நேரலை - ECI Commissioner
Published : Feb 24, 2024, 3:25 PM IST
|Updated : Feb 24, 2024, 3:41 PM IST
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு, அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரலை காட்சிகளை பார்த்து வருகிறோம்..இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் குழுவினர், மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் பெரும்பாலான கட்சிகள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்திருந்தது. இதையும் படிங்க: காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Last Updated : Feb 24, 2024, 3:41 PM IST