Live: கடலூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை! - EPS Campaign in Puducherry - EPS CAMPAIGN IN PUDUCHERRY
Published : Mar 30, 2024, 8:01 PM IST
|Updated : Mar 30, 2024, 8:41 PM IST
புதுச்சேரி/கடலூர்: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 27ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்று 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று (மார்ச் 30) மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட தேர்தல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதனால், தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திருச்சியிலிருந்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.இந்த நிலையில், இன்று புதுச்சேரியிலும் மற்றும் கடலூரிலும் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடலூர் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..
Last Updated : Mar 30, 2024, 8:41 PM IST