"யார் பெயர் கேக்குது?.. தானா காலர் தூக்குது.."- திமுக முப்பெரும் விழா பாடல் வெளியீடு! - DMK released Function Song - DMK RELEASED FUNCTION SONG
Published : Jun 15, 2024, 4:08 PM IST
சென்னை: நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த ஜூன்.4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தல் முடிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளையும் வென்றன.
இந்த தேர்தலில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ, விசிக தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி, கொதக உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சசிகாந்த் 7,96,956 வாக்குகள் பெற்று 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், 40க்கு 40 திமுக பெற்றதை கொண்டாடும் விதமாக கோவையில் இன்று (ஜூன்.15) முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திமுக சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலின், முதலில் யார் பெயர் கேக்குது? தானா காலர் தூக்குது.. என்ற தொடக்கத்துடன் கூடிய பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் மொத்தம் 2 நிமிடங்கள் 46 விநாடிகள் கொண்டதாகும்.
பாடலின் இடையே 'எங்கள பிரிக்கப் பார்த்த சங்கிக்கெல்லாம் சங்கு.. காவி கறையை துடைச்சது யாரு?' என மத்திய அரசை மறைமுகமாக தாக்குவதைப் போன்ற வரிகளையும், ’இது பெரியாரு மண்ணு’ என பெரியாரையும் குறிப்பிட்டும், பாடல் வரிகள் உள்ளன.