தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நேரலை காட்சிகள் - Tamil Nadu Investment Conclave - TAMIL NADU INVESTMENT CONCLAVE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 10:34 AM IST

Updated : Aug 21, 2024, 11:35 AM IST

சென்னை தி லீலா பேலஸில் நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜன.7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவாக அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டிற்க்லு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர், 17 நாட்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற உள்ளது.அப்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது. மேலும் 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக 2021-23 ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலமாக 19 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனால் 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 21, 2024, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details