ஜெஸ்ட் மிஸ்.. கோவையில் வாக்கிங் சென்ற தம்பதியை துரத்திய யானை - வீடியோ வைரல்! - coimbatore elephant
Published : Jun 24, 2024, 10:43 AM IST
கோயம்புத்தூர்: மருதமலையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் மருதமலை, ஐ.ஓ.பி காலனி, பாரதியார் பல்கலைக்கழக வளாக பகுதிகளில் சுற்றி வருகின்றன. அவ்வாறு வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள I.O.B காலனி குடியிருப்பில் வாக்கிங் செல்வதற்காக ஒரு தம்பதியர் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவர்களை விரட்டியது.
இதனால் அச்சமடைந்த இருவரும் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். அந்த யானை வீட்டின் கேட்டின் முன்பு நின்று விட்டு, எந்த பிரச்சினையும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.