டெல்லி:லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் நத்திங் நிறுவனம், அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான போன் (2 ஏ) இந்தியாவில் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தில் முதலீடு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.நாட்டின் வளமான உற்பத்தி சூழலை உண்டாக்குவதை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நத்திங் நிறுவனம் 2022ஆம் ஆண்டு Phone 1 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தி தனது போர்ட்ஃபோலியோவை (portfolio) விரிவுபடுத்தி வருகிறது நத்திங் நிறுவனம். குறிப்பாக தங்களது துணை பிராண்டான CMF பெயரில் பல வகையான ஆடியே சாதனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் Phone 1 அறிமுகமாகி இரண்டு வருடங்கள் கழித்து நந்திங் Phone 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளார்கள். நத்திங் Phone 2A என அதிகாரப்பூர்வமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தயாரிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் பைய் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்போன் இந்தியாவில் வரும் 5-தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிகழ்வு டெல்லியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த நிறுவனத்தின் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த நிகழ்சியில் பங்கேற்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
நத்திங் Phone 2A ஸ்மாட்போன் சிறப்பம்சங்கள்:6.7 இன்ச் OLED பேனலுடன் கூடிய 120Hz ரெஃப்ரெஷ் விகிதங்களில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதுமட்டுமின்றி டூயல் கேமரா செட்டப், முதன்மை கேமரா 50MP மற்றும் அல்ட்ரா வைடு கேமரா போன்ற வசதிகளும் இந்த ஸ்மாட்போனில் உள்ளது.
8GB+128GB மற்றும் 8GB+256GB என இரண்டு மாடல்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, Nothing போனுக்கே பிரத்தியேகமாக இருக்கக் கூடிய glyph லைட்டிங் இண்டர்ஃபேஸுடன் Phone 2a ஸ்மாட்போனும் வருமா என்பது போன் அறிமுகப்படுத்திய பிறகே தெரியும்.
இதையும் படிங்க:வியோமாநாட்ஸ் என்றால் என்ன? சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்த திட்டமா? 1984ல் விண்வெளி சென்ற இந்தியர்!